மக்களே கவனம்.. காரமான உணவுகளை ரொம்ப பிடிக்குமா?.. இனி இப்படி டிரை பண்ணி பாருங்க..! உங்களுக்காகவே சூப்பர் டிப்ஸ்..!!



Tips for spicy food lovers

பண்டைய காலம் முதல் தற்போதைய காலம் வரை உலகளவில் அதிக காரமுடைய உணவுகளை சமைப்பதில் இந்தியா தான் முதலிடத்தில் இருக்கிறது. மேலும் தவிர்க்க முடியாத சுவைகளை அள்ளிக்கொடுக்கும் மையமாகவும் திகழ்கிறது. 

இதுபோன்ற மரபுகளை பின்பற்றுவது குறித்து ஆயுர்வேதா போன்ற பழமையான மருத்துவம் ஊக்குவிக்கிறது. அத்துடன் கார உணவுகள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் பருவ கால நோய் தொற்றிலிருந்தும் பாதுகாப்பதாக ஆயுர்வேதம் கூறுகிறது.

மேலும் உடல் பருமன், இதய நோய்கள், பல்பிரச்சினை போன்றவை இயற்கையாகவே வராமல் தடுத்து உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. ஆனால் சிலர் மசாலா உணவுகளை விரும்பினாலும் அசிடிட்டி, செரிமான பிரச்சனை மற்றும் எரிச்சல் வளர்வதற்கு பயந்து அதனை தவிர்த்து விடுவர். 

healthy tips

காரத்தை விரும்புபவர்களுக்கு சில எளிமையான வழிமுறைகள் : 

அதிமதுர டீ :

காரமான உணவுகளை சாப்பிட்ட பின் அதிமதுர டீ குடிப்பதன் மூலம் எரிச்சல் ஏற்படாமல் தடுக்க இயலும். மேலும் ஒரு இன்ச் அதிமதுர வேரை, இரண்டு கப் நீரூற்றி ஒரு கப் ஆகும் வரை நன்றாக கொதிக்கவிட்டு வெதுவெதுப்பான சூட்டில் பருகினால் மிகவும் நல்லது.

ப்ரோபயோடிக் சேர்த்துக்கொள்ள வேண்டும் :

மசாலா பொருட்களின் வீரியத்தை குறைக்கும் இயற்கையான வழிமுறைகளில் ஒன்று தயிர் சேர்த்தல். உணவுடன் அல்லது மிளகு உணவுகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இது காரமான உணவுகளின் சுவையை குறைக்காமல் இருக்கும். அதே சமயம் எரிச்சல் ஏற்படுத்தாமல் இருக்கும்.

உணவில் மிளகாயை குறைக்கலாம்:

காரமான உணவுகளில் மிளகாய் சேர்ப்பதாலே எரிச்சல் உணர்வு ஏற்படுகிறது. சிவப்பு அல்லது பச்சை மிளகாய்க்கு பதிலாக பெருங்காயம், பூண்டு மற்றும் அல்லது கருப்பு மிளகு சேர்த்துக் கொள்ளலாம். இதனால் எளிது செரிமானம் ஏற்படும்.

இனிப்பு சுவையுடன் தொடங்கலாம் :

உணவு சாப்பிட ஆரம்பிக்கும் முன் சிறிதளவு இனிப்பு சுவைகொண்ட உணவுடன் தொடங்க வேண்டும். பின் சிறிதளவு உப்பு சுவை, அதன் பின் கார உணவுகளை சேர்ப்பதால் எரிச்சல் மற்றும் காரம் தெரியாது . அத்துடன் இறுதியாக ஜில்லென்று ஏதாவது சாப்பிடுவதால் நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.