தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
மகளிர் பக்கம்: பிறப்புறுப்பில் ஏற்படும் பிரச்சனைகளும், தவிர்க்கும் வழிமுறைகளும்..! அசத்தல் டிப்ஸ்.!!
பெண்கள் தங்களின் உடல் நலத்தில் பிறப்புறுப்புக்கென முக்கியத்துவம் அளிக்க வேண்டியது கட்டாயமாகும். அதனைப்போல, பிறப்புறுப்பு சுத்தம் தொடர்பாக அறிந்துகொள்வதும் அவசியம்.
பெண் பிள்ளைகளின் குழந்தைகள், தங்களின் மகளுக்கு 10 முதல் 12 வயது முதல் பிறப்புறுப்பு சுத்தம் தொடர்பாக சொல்லிக் கொடுக்கலாம். பிறப்புறுப்பில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என்றால், உடல் நலம் சீராக இருக்கிறது என்றே அர்த்தம். தினமும் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவற்றை செய்ய வேண்டும்.
மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வெள்ளைப்போக்கு இயல்பானது தான். சாதாரணமாக ஏற்படும் வெள்ளைப்படுத்தலில் துர்நாற்றம் என்பது இருக்காது. நிறம் மற்றும் அரிப்பு புண்கள் போன்றவையும் ஏற்படாது. வெள்ளைப்படுதல் இருக்கும் பட்சத்தில் பிறப்புறுப்பில் துர்நாற்றம், நிறம், அரிப்பு போன்றவை ஏற்படும். அவ்வாறு இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுவது நல்லது.
அடர் நிறத்துடன் கொண்ட வெள்ளைப்படுதல், மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான வெள்ளைப்படுதல், பிறப்புறுப்பில் துர்நாற்றம், குழந்தை பிறந்து 8 மாதங்கள் ஆகியும் தாம்பத்தியத்தில் வலி, சிறுநீர் தொற்று, சிவப்பு நிற வீக்கத்துடன் காணப்படும் பிறப்புறுப்பு, பிறப்புறுப்பு உலர்தல், தாம்பத்தியத்தின் போது ஏற்படும் பிறப்புறுப்பு வலி, காரணம் இல்லாமல் பிறப்புறுப்பு வலி, எரிச்சல், இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் பாலிஸ்டர் உடையால் காற்று புகாமல் ஏற்படும் பிரச்சனையை தவிர்க்க மருத்துவ ஆலோசனைகள் பெறுவது நல்லது.
உடற்பயிற்சி செய்ததும் பெண்கள் உள்ளாடையை மாற்ற வேண்டும். ஒரே உள்ளாடையை உபயோகம் செய்யும் பட்சத்தில், உடற்பயிற்சியின் போது வெளியேறும் வியர்வை உடலிலேயே தங்கி பிரச்சனையை ஏற்படுத்தும். பிறப்புறுப்பில் அதிகளவு சோப் அல்லது அதிக காரத்தன்மை கொண்ட சோப் போன்றவற்றை உபயோகம் செய்ய கூடாது. பிறப்புறுப்பு மற்றும் மலத்துவாரத்தை முன்னிருந்து பின் என்ற முறையில் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் மலக்கிருமிகள் பிறப்புறுப்பை தாக்கும் அபாயம் குறையும்.
அதனைப்போல, உள்ளாடைகளுக்கு அதிகளவு காரத்தன்மை கொண்ட பவுடர்களை உபயோகம் செய்ய கூடாது. இதனால் எரிச்சல் போன்ற பிரச்சனையும் ஏற்படும். நேராக உட்கார்ந்து பழக வேண்டும். இதனால் உடலின் இரத்த ஓட்டம் சீராக்கப்படும். மாதவிடாய் நாட்களில் 3 முதல் 5 மணிநேரத்திற்கு ஒருமுறை நாப்கின், டாம்பான் போன்றவற்றை மாற்றம் செய்ய வேண்டும். பிறப்புறுப்பு பகுதியில் இருக்கும் முடிகளை ட்ரிம்மிங் செய்வது நல்லது. முடியை நீக்கும் கிரீமில் கெமிக்கல் இருக்கும். அதனை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
வாசனை சோப், பாடி வாஷ் போன்றவற்றை பிறப்புறுப்பு பகுதிகளில் இடக்கூடாது. இவை பிறப்புறுப்பின் பி.எச் அளவினை மாற்றத்திற்கு உள்ளாக்கும். மாதவிடாய் நாட்களில் 2 முதல் 3 முறை பிறப்புறுப்பை சுத்தம் செய்வது நல்லது. சாதாரண நீர் அல்லது மிகமிக இளம் சூடுள்ள நீரினை வைத்து பிறப்புறுப்பு பகுதிகளை சுத்தம் செய்யலாம். தினமும் உடலுக்கு தேவையான அளவு நீர் குடிப்பது, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது.
இறுக்கமான உடைகள் மற்றும் உள்ளாடைகள் பிறப்புறுப்பு மற்றும் உடல் சூட்டினை அதிகரிக்கும். இதனால் தொற்று நோய்கள் ஏற்படும். பருத்தியினால் தயார் செய்யப்பட்ட உள்ளாடைகளை அணிந்துகொள்வது நல்லது. பாலிஸ்டர் போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட உள்ளாடை மற்றும் உடலை தவிர்க்கலாம். வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும் பட்சத்தில், நாளொன்றுக்கு 2 முறை உள்ளாடையை மாற்றம் செய்ய வேண்டும். இரவுகளில் உள்ளாடையை தவிர்த்திடலாம்.
திருமணம் ஆன பெண்கள் தாம்பத்தியத்திற்கு பின்னர் பிறப்புறுப்பை சுத்தம் செய்து உறங்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். இதனால் பாக்டீரியா பரவுதலை தடுக்கலாம். சில பெண்களுக்கு தாம்பத்தியத்தின் போது வலி ஏற்படும். அதனை குறைக்க எண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். மருத்துவரின் ஆலோசனையை இந்த விஷயத்தில் பெற்றுக்கொள்வது நல்லது.