Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!
ஞாபக சக்தி மந்தமா? குழந்தைகளுக்கு கொடுங்க வல்லாரை கீரை...
வல்லாரைக் கீரை நிறைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. இந்த கீரையை குழந்தைகளுக்கு அடிக்கடி உணவில் சேர்ப்பதால் அவர்களின் ஞாபக சக்தி அதிகரிக்க உதவுகிறது. ஞாபகம் வருதே அதிகம் உள்ள குழந்தைகளுக்கு வண்ணாரக்கீரை ஒரு அற்புத மருந்தாகும்.
வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக உள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்கள், சரிவிகித அளவில் உள்ளது.
வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் நோய் குணமாக வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. வல்லாரைக் கீரை மத்திய நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும். வல்லாரை விழுதை தொடர்ந்து மாதக் கணக்கில் சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாகும்.
உடலில் ஏற்படும் கட்டிகள், புண்கள் ஆகியவற்றை சரி செய்யும் ஆற்றல் வல்லாரைக்கு உண்டு. வல்லாரை கீரையுடன் மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து நைசாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் காய்ச்சல் குணமாகும். வல்லாரைப் பொடியைக் கொண்டு பல் துலக்கினால் பல்லிலுள்ள மஞ்சள் கறைகள் நீங்கும். மேலும் பல் ஈறுகள் பலப்படும். கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் போன்றவற்றை சரிசெய்து கண் நரம்புகளுக்கு பார்வைத்திறனை அதிகரிக்கிறது.
யானைக்கால் நோய் இருப்பவர்கள் வல்லாரைக் கீரையை தொடர்ந்து காலில் வைத்து கட்டி வந்தால் யானைக்கால் நோய் குணமாகும். வல்லாரை கீரையை அரைத்து, அதை சாப்பிட்டு வந்தால் விரை வீக்கம், வாயு வீக்கம், தசை சிதைவு போன்றவை குணமாகும்.
நல்ல ஞாபசக்தி உண்டாக வல்லாரை இலையுடன் அரிசி, திப்பிலி சேர்த்து ஊறவைத்து மைபோல அரைத்து, காலை, மாலை நெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல ஞாபசக்தி உண்டாகும்.