மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டெங்கு வைரஸால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன..? எப்படி எதிர்கொள்வது...!
கொசுக்களில் இருந்து பரவும் டெங்கு காய்ச்சல் உடல் நலத்தை பலவீனப்படுத்தக் கூடிய வைரஸ் ஆகும். காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, உடல் வலி, வாந்தி, வயிற்று வலி, கண்களையொட்டிய பகுதியில் வலி, எலும்பு பகுதிகளில் வலி போன்றவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். காய்ச்சலுடன் இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நோயின் வீரியத்தை குறைக்க உதவும்.
நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்த நோயிலிருந்தும் மீள்வது எளிது. எனினும் டெங்கு காய்ச்சல் காரணமாக, உடலில் உள்ள பிளேட்லெட் எனப்படும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகும். மேலும் ரத்த அணுக்களை நிறமற்றதாக மாற்றுவதால் ரத்த உறைவு பிரச்சினையையும் எதிர்கொள்ள நேரிடும். அப்படி பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவைப்படும். அப்போது சில பக்க விளைவுகள் ஏற்படலாம். எனினும் டெங்கு வைரஸால் நீண்டகால பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதே மருத்துவர்களின் கருத்து.
டெங்கு காய்ச்சல் உடலை பலவீனப்படுத்தி தசை மற்றும் மூட்டுகளில் வலிகளை ஏற்படுத்தும். எழுந்து நடமாட முடியாத நிலையையும் சிலருக்கு ஏற்படுகிறது. நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு பத்து முதல் பதினைந்து நாட்கள் ஆகும். ஒருமுறை டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் நோய் எதிர்ப்பு சக்தி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு சில மாதங்களாகும். அதற்குள் இரண்டாவது முறையாக டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் பாதிப்பு கடுமையாக இருக்கும். அதனால் நோய் பாதிப்பு ஏற்பட்டால் மருத்துவர் கூறும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இளநீர், பப்பாளி சாறு போன்ற திரவங்களை உட்கொள்வது டெங்கு காய்ச்சலில் இருந்து விரைவில் மீள்வதற்கு உதவும்.