வெள்ளைப்படுதல் பிரச்சனையை சரி செய்ய என்ன செய்யலாம்?.. பெண்களுக்கான அசத்தல் டிப்ஸ்.!



Woman White Discharge Solution Tamil

பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் வெள்ளை நிற திரவம் வெள்ளைப்படுதல் என்று கூறப்படுகிறது. இது வெளியேறும் நேரங்களில் வெள்ளை நிறத்துடன் இருக்கும் என்று குறிப்பிட இயலாது. பெண்களின் உடல் பாதிப்புக்கு ஏற்றார் போல மஞ்சள், சாம்பல், பச்சை, பழுப்பு நிறங்களில் இருக்கும். 

வெள்ளைப்படுதல் அதிகளவு வெளியேறும் பட்சத்தில், அதனால் தீவிரமான பாதிப்பு ஏற்படும். உடல் பலவீனமடையும். இதனால் வெள்ளைப்படுதல் பிரச்சனையை சாதாரணமாக எடுக்கொள்ளாமல், பிரச்சனை இருப்பின் மருத்துவரை அணுகுவது நல்லது. 

White Discharge

அவ்வப்போது, வெள்ளைப்படுதல் மாதவிடாய் போன்றும் வெளியேறி மாய தோற்றத்தை ஏற்படுத்தும். சில பெண்களுக்கு மாதவிடாய் நாட்களை உணர்த்தும் பொருட்டு மாதவிடாய் தொடங்கும் முன்னரும், பின்னரும் வெள்ளைப்படுதல் ஏற்படும். இவ்வாறாக வெளியேறும் வெள்ளைநிற திரவத்தால் நோய்த்தொற்றுகள் ஏற்படும். 

இதனால் Vagina பகுதி சுகாதாரமற்ற நிலையை அடைந்து துர்நாற்றம் வீசும். அரிப்பு மற்றும் பிற அசௌகரியம் ஏற்படும். வெள்ளைப்படுதல் தண்ணீர் போல வெளியேறினால் பெரியளவு பாதிப்பு இல்லை என்றாலும், கவனத்தில் இட்டுக்கொள்ள வேண்டும். வெள்ளைப்படுதல் எந்த பெண்களுக்கும், எப்போது வேண்டும் என்றாலும் ஏற்படும். 

உடலில் இருக்கும் கழிவும், வெஜினா தன்னைத்தானே சுத்தம் செய்யும் கழிவும் வெளியேற்றப்படும் நிகழ்வு வெள்ளைப்படுதல் என்று அழைக்கப்படுகிறது. கருத்தடை மாத்திரைகளை அதிகளவு சாப்பிடுதல், அதிகளவு உணர்ச்சிவசப்படுவது, மன அழுத்தம் மற்றும் கவலை போன்ற பிரச்சனையிலும் வெள்ளைப்படுதல் ஏற்படும். கருத்தரிக்கும் போதும் வெள்ளைப்படுதல் அதிகளவு ஏற்படும். 

White Discharge

வெள்ளைப்படுதல் கழிவுகளை வெளியேற்றாமல் இருந்தால், அது பாக்டீரியா தொற்றுக்கும் வழிவகை செய்யும். அதிகளவு வெளியேறினால் உடலில் எதோ பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். தீவிரமாகும் பட்சத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படலாம். அதனால் ஒவ்வொரு வருடமும் மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளுதல் நல்லது. 

சாதாரண நீர் போன்று வெளியேறும் வெள்ளைப்படுதலை கட்டுப்படுத்த நெல்லிக்காயை தினம் சாப்பிடலாம். தனியா விதைகளை இரவில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் குடிக்கலாம். அதனைப்போல, கொய்யாப்பழ இலைகளை கொதிக்க வைத்து, அந்த நீர் குளிர்ந்ததும் அதனை குடித்து வந்தாலும் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.