மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா.? கருஞ்சீரகம் டீ இருக்கும் போது கவலை எதற்கு.?
கருஞ்சீரகம் இயற்கை நமக்கு வழங்கிய ஒரு அற்புதமான பொருளாகும். மரணத்தை தவிர இதில் அனைத்து நோய்களுக்கும் தீர்வு இருக்கிறது என இஸ்லாமியர்களின் இறைத்தூதர் முஹம்மது நபி கூறியிருக்கிறார்.
உடல் எடை குறைப்பு இதய நோய் பிரச்சனை உயர் ரத்த அழுத்தம் மற்றும் பல சரும பிரச்சனைகளுக்கும் கருஞ்சீரகம் சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதில் தேநீர் தயாரித்து குடிப்பதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம் என உணவு கட்டுப்பாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தனை குணங்கள் நிறைந்த கருஞ்சீரக தேநீர் எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்: புதினா – 1 கைப்பிடியளவு, கருஞ்சீரகம் – 2 ஸ்பூன், தேன் – 2 ஸ்பூன், இஞ்சி – 1 துண்டு
செய்முறை: முதலில் 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்த பின்னர் அதில் கருஞ்சீரகத்தைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். இவ்வாறு கொதிக்க வைக்கும் போது கருஞ்சீரகத்தின் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும்.
இஞ்சி மற்றும் கருஞ்சீரகம் இரண்டும் சேர்த்து கொதித்து வரும் போது சிறிதளவ புதினாவைச் சேர்க்கவும். புதினா சேர்த்த பின் கொதிக்க வைக்கத் தேவையில்லை. அடுப்பை அணைத்து விட்டு 5 நிமிடங்கள் கழித்து கருஞ்சீரக டீயை வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்த்தால் கருஞ்சீரக டீ தயாராகி விடும்.
இந்த கருஞ்சீரக டீயை காலை வெறும் வயிற்றில் குடிப்பது உடல் எடை வேகமாக குறைவதற்கு உதவும். இந்தத் தேநீரை காலை,மாலை அல்லது இரவு உறங்கச் செல்வதற்கு முன் குடிக்கலாம். கருஞ்சீரக டீ எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக பால் டீ மற்றும் காபி ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.