7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 50 வயது தொடக்கப்பள்ளி ஆசிரியர் போக்ஸோவில் கைது.!



in Salem Teacher Sexually Harassed 7 Year Old Girl

சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம், வெள்ளாளபுரம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50 க்கும் அதிகமான மாணவ-மாணவியர்கள் பயின்று வருகிறார்கள்.

இதே பள்ளியில், நாகர்கோவில் பகுதியில் வசித்து வரும் பிரான்சிஸ் ஆண்டனி (வயது 50), ஆசிரியயராக வேலை பார்த்து வருகிறார்.

பணி நிமித்தமாக தாரங்கம், காட்டு பிள்ளையார்கோவில் தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருக்கிறார். இப்பள்ளியில் 7 வயதுடைய சிறுமி, இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.

இதையும் படிங்க: ஏற்காடு: காதலி கொலை விவகாரம்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் தகவல்கள்.. செல்போனில் ஆபாச படங்கள்.!

Salem

பாலியல் தொல்லை

சம்பவத்தன்று 7 வயது சிறுமிக்கு பிரான்சிஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறவே, அவர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர்.

இதன்பேரில் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையைத் தொடர்ந்து சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து ஆண்டனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

இதையும் படிங்க: 14 வயது சிறுமியை கள்ளக்காதலன் அத்துமீற அனுமதித்த 35 வயது தாய்.. நண்பனுக்கு பெரும் துரோகம் இழைத்த நட்பு.. பதறவைக்கும் பின்னணி.!