ஏற்காடு: காதலி கொலை விவகாரம்; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் தகவல்கள்.. செல்போனில் ஆபாச படங்கள்.!



Salem Woman Murder Case Update 07 March 2025

2 காதலிகளுடன் சேர்ந்து காதலியான பெண் ஒருவரை இளைஞன் கொலை செய்த விவகாரத்தில், அதிர்ச்சி தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை அல்பியா (வயது 34), ஏற்காடு 60 அடி பள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் குறித்த விசாரணையில், அல்பியாவை கொலை செய்ததாக, ஆசிரியையின் காதலனான கல்லூரி மாணவர் அப்துல் ஹபீஸ் (வயது 22), அவரின் பிற 2 காதலிகள் மோனிஷா (வயது 21), டாவியா சுல்தானா (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

பெண்ணுடன் தனிமை

இவர்கள் மூவரிடமும் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, ஹபீஸ் சேலத்தில் செயல்படும் செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தபோது, செல்போன் பழுது பார்க்க வந்த அல்பியாவுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இருவரும் பல இடங்களுக்கு சென்று, பல நேரங்களில் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க: 14 வயது சிறுமியை கள்ளக்காதலன் அத்துமீற அனுமதித்த 35 வயது தாய்.. நண்பனுக்கு பெரும் துரோகம் இழைத்த நட்பு.. பதறவைக்கும் பின்னணி.!

காதல் மன்னன்

அதேநேரத்தில், அப்துல் ஹபீஸ் சுல்தானா என்ற பெண்ணுடன் பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடக்கவும் முடிவு செய்யப்பட்டது. கொரோனா காலத்தில் அப்துலுக்கு மோனிஷா என்ற மருத்துவக்கல்லூரி மாணவியுடனும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தான் சந்திக்கும் நபர்களை காதல் வலையில் வீழ்த்தி அப்துல் வாழ்ந்து வந்துள்ளார்.

Salem

கொலை திட்டம்

அப்துலின் திருமணம் தொடர்பான தகவல் அல்பியாவுக்கு தெரியவரவே, நாம் காதலிக்கிறோம், நாமே திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், திருமணம் செய்யாத பட்சத்தில், உனது பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்வேன் எனவும் மிரட்டியுள்ளார். இதனால் காதலிகள் உதவியுடன் பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

உடந்தையாக உண்மை தெரியாத பெண்கள்

 

சுல்தானாவிடம் தன்னை நல்லவன் போல காண்பித்த அப்துல், பெண்ணிடம் சகோதரியாக பழகினேன். அவர் என்னை காதலிப்பதாக கூறி, தற்கொலை செய்வதாக மிரட்டுகிறார். திருமணத்திற்கு இடையூறு செய்கிறார் என கூறியுள்ளார். மேலும், மோனிஷா என்ற தோழி மருத்துவம் படிக்கிறார். அவரின் உதவியுடன் கொலை செய்வோம் என கூறியுள்ளார். 

ஆபாச வீடியோ

மோனிஷாவுக்கு விஷயத்தில் விருப்பம் இல்லை என்றாலும், கட்டாயத்தின் பேரில் அவரும் கொலைக்கு ஒப்புக்கொண்டார். வாடகை காரில் பெண்ணை கடத்தியவர்கள், வீரியம் அதிகம் கொண்ட ஊசியை அல்பியாவின் உடலில் செலுத்தி மலையில் இருந்து தள்ளிவிட்டனர் என்பது தெரியவந்தது. அல்பியா தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்பதால் எஸ்சி., எஸ்டி பிரிவிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்துல் ஹபீஸின் ஸ்மார்ட்போனில் பல ஆபாச வீடியோவும் இருந்துள்ளது. இதனால் இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: காதலித்து குத்தமா? இளம்பெண் கொடூர கொலை.. முக்கோண காதலால் சேலத்தில் நடந்த பயங்கரம்.!