மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டியூசன் சென்ற 12 வயது சிறுவனுக்கு அடிக்கடி வந்த வயிற்றுவலி! பரிசோதனையில் வெளிச்சத்திற்கு வந்த அதிர்ச்சி உண்மைகள்!!
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுபடுத்த நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனாஅச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் நலனுக்காக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. மேலும் பெற்றோர்கள் பலரும் தனியார் பள்ளி ஆசிரியர்களிடம் தங்களது குழந்தைகளை டியூசனுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இந்நிலையில் குஜராத், அகமதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் தால்தேஜ் பகுதியை சேர்ந்த 21 வயது நிறைந்த பார்த் பரோத் என்பவரிடம் டியூஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து சிறுவனுக்கு ஒரு மாதமாகவே கடுமையான வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. இந்தநிலையில் சிறுவனது பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்
சென்றுள்ளனர். மேலும் வழக்கமாக கொடுக்கும் மருந்தையும் கொடுத்துள்ளனர். ஆனாலும் எந்த பலனுமில்லை. வயிற்றுப்போக்கு சரியாகவில்லை.
அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிறுவனை பரிசோதனை செய்து பார்த்த நிலையில், சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது. அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் அந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டபோது, தனது டியூசன் ஆசிரியர் பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனை யாரிடமாவது சொன்னால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என அவர் மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து இது குறித்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்ட நிலையில், டியூசன் ஆசிரியர் பார்த் பரோட் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.