மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 வயதில் காணாமல் போன சிறுவன்.. மூன்று வருடம் கழித்து ஊரடங்கில் கிடைத்த மகிழ்ச்சி.! அதிர்ச்சியில் ஊர்மக்கள்.
மத்தியப்பிரதேசத்தை சேர்ந்தவர் சிறுவன் உதய். இவன் குடும்ப தகராறு காரணமாக தனது 12 வயதில் வீட்டை விட்டு வெளியேறி டெல்லியில் உள்ள சிறிய கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளான். இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் உணவு மற்றும் வேலையின்றி இருந்த சிறுவன் உதய்க்கு குடும்பத்தாரின் நினைவு வந்துள்ளது.
அதனை அடுத்து நடைப்பயணமாக தனது சொந்த ஊரை அடைந்துள்ளார் உதய். தனது மகனை பார்த்த சந்தோசத்தில் பெற்றோர் இருக்க ஊர்மக்கள் அனைவரும் அந்த சிறுவனை அதிர்ச்சியாக பார்த்துள்ளனர். காரணம் மூன்று வருடங்களுக்கு முன்பு சிறுவன் காணாமல் போனதாக சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.
அதன்படி போலீசார் உதய் காணாமல் போன சில நாட்கள் கழித்து காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலத்தில் இருந்த உடையும் உதய் காணாமல் போன நாள் அணிந்திருந்த உடையும் ஒன்றாக இருந்ததை அடுத்து பெற்றோர் அந்த சடலத்திற்கு இறுதி சடங்குகளை செய்துள்ளனர்.
இதன் காரணமாக தான் ஊர்மக்கள் சிறுவனை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதே நேரத்தில் சிறுவன் கிடைத்த சந்தோசத்தில் பெற்றோர் இருக்க, மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்த அந்த சடலம் யார் என்பது குறித்த விசாரணையை போலீசார் மீண்டும் தொடங்கியுள்ளனர்.