மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
6 பேர் சிறார் கும்பலால் சிதைக்கப்பட்ட 13 வயது சிறுமி; மைனர் சிறார்களின் நெஞ்சை பதறவைக்கும் துயரம்.. பலாத்கார வீடியோ வைரல்..!
13 வயது முதல் 15 வயது வரை உள்ள சிறார்கள் 13 வயதாகும் சிறுமியை கடத்தி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள க்ரீம்கஞ்ச் மாவட்டத்தில் வசித்து வரும் 13 வயது சிறுமியை, 6 பேர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்வது தொடர்பான வீடியோ அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்த விடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், அங்குள்ள காவல் நிலையத்தில் நவ. 7ம் தேதி புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், சிறுமி 6 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
இதில், அதிர்ச்சியூட்டும் விஷயமாக சிறுமியை பலாத்காரம் செய்த கும்பலை சேர்ந்த 6 பேரும் 13 - 15 வயதுக்கு இடைப்பட்ட சிறார்கள் என்ற பகீர் தகவலும் அம்பலமானது. சம்பவத்தன்று, வீட்டில் இருந்து வெளியே தனியே அடைந்து சென்ற சிறுமியை 6 பேர் கும்பல் கடத்தி கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
மேலும், இந்த கொடூரத்தை விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததற்கு பின்னர் தான் சிறுமியின் பெற்றோருக்கே விஷயம் தெரியவந்துள்ளது. சிறுமியை பலாத்காரம் செய்த கும்பல் மிரட்டி அனுப்பியதால், அவர் மன & உடல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு தனிமையிலேயே இருந்துள்ளார்.
மகளின் நிலையை கண்ட பெற்றோர் கேள்வி எழுப்பும் போது, தனக்கு உடல்நலம் சரியில்லை என்று கூறி சமாளித்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல் துறையினர், 6 பேர் கொண்ட சிறார்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். அங்குள்ள சமூக ஊடகங்களில் பரவிய விடியோவை அழிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.