மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இன்ஸ்டா நண்பரால் கர்ப்பம்.! யூடியூப் பார்த்து குழந்தை பெற்ற 15 வயது சிறுமி.! பின் செய்த கொடூரம்!!
மும்பை, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 15 வயது சிறுமி யூடியூபில் வீடியோ பார்த்து சுயமாக பிரசவம் பார்த்து குழந்தை பெற்றுக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக பழகி வந்துள்ளனர். இதில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்த நிலையில் அவர் இதுகுறித்து யாரிடமும் செல்லாமல் தான் மட்டுமே மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டு வந்துள்ளார்.
மேலும் வயிறு பெரிதாக இருக்கிறது என சிலர் கேட்டபோது வயிற்றில் பிரச்சனை என கூறி சமாளித்து வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது அவருக்கு பிரசவ வலி ஏற்படவே அவர் கதவை பூட்டிக்கொண்டு யூடியூப் வீடியோ பார்த்து தனக்குத்தானே சுயபிரசவம் செய்து கொண்டுள்ளார். மேலும் குழந்தை பிறந்தது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக அதனை கழுத்தை நெரித்துக் கொலை செய்து வீட்டில் உள்ள பெட்டி ஒன்றில் மறைத்து வைத்துள்ளார். சிறிது நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பிய அவரது அம்மா வீட்டில் ரத்தக்கறை இருப்பதை கண்டு அவரிடம் விசாரித்துள்ளார்.
அவர் மாதவிடாய் என கூறி சமாளிக்க முயன்ற நிலையில் அதை நம்பாமல் அவரது அம்மா மீண்டும் கேட்ட நிலையில் சிறுமி நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்துள்ளார். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவலளிக்கப்பட்ட நிலையில் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு கர்ப்பத்திற்கு காரணமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.