#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வினையில் முடிந்த பள்ளி பருவ காதல்... பிளஸ் 2 மாணவி கர்ப்பம்.!! 17 வயது மாணவன் கைது.!!
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த +2 படிக்கும் மாணவி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்தப் பெண்ணின் கர்ப்பத்திற்கு காரணமான அவரது பள்ளி தோழனை காவல்துறையினர் கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பள்ளி பருவ காதல்
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் உள்ள பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி +2 படித்து வந்திருக்கிறார். இந்நிலையில் மாணவிக்கும் அவருடன் ஒரே வகுப்பில் படிக்கும் மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. மேலும் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக தெரிகிறது
.
கர்ப்பமான மாணவி
இந்நிலையில் மாணவிக்கு அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக அவரிடம் விசாரித்துள்ளனர்.
இதையும் படிங்க: "அவ பொணத்த கள்ள புருஷன் வீட்டுக்கே அனுப்புங்க.." இறந்த பின்பும் அவமானப்பட்ட பெண்.!! கள்ளக்காதல் விபரீதம்.!!
போக்சோவில் கைது
மாணவியும் தனது பெற்றோரிடம் நடந்த விஷயங்களை கூறியிருக்கிறார். மேலும் பள்ளியில் தன்னுடன் படிக்கும் சக மாணவன் தான் தனது கர்ப்பத்திற்கு காரணம் என தெரிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவரை கைது செய்துள்ள காவல் துறையினர் அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது மாணவி கர்ப்பமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி... பட்டப் பகலில் கொடூர கொலை.!! மர்ம நபர்கள் தலைமறைவு.!!