நீடிக்கும் உக்ரைன் - ரஷ்யா போர்.! நேற்று மட்டும் 3 குழந்தைகள் உள்பட 198 பேர் பலி.!



198 people killed in Russian-Ukraine war

உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். ரஷியாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.  நேற்று முன்தினம் 2வது நாளாக ரஷிய தரப்பில் 7 விமானங்கள், 6 ஹெலிகாப்டர்கள் மற்றும் 30க்கும் கூடுதலான பீரங்கிகள் அழிக்கப்பட்டு விட்டதாகவும், ரஷிய தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என்றும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில், 3வது நாளான நேற்று உக்ரைனின் 211 ராணுவ நிலைகளை இலக்காக கொண்டு அழித்துள்ளோம் என்று ரஷியா தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உக்ரைன் சுகாதார அமைச்சர் அவரது முகநூல் பதிவில், 3 நாளாக தொடர்ந்து நடந்து வரும் போரில் 1,115 உக்ரைனியர்கள் காயமடைந்து உள்ளனர்.  அவர்களில் மொத்தம் 33 பேர் குழந்தைகள்.  ரஷியா தொடுத்துள்ள போரில் 3 குழந்தைகள் உள்பட 198 பேரை இதுவரை இழந்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.