மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெற்றோர்களே உஷார்.. கண்ணாமூச்சி விளையாடிய 2 சிறுமிகள் உயிரிழப்பு.!
ராஜஸ்தான் மாநிலத்தில் கண்ணாமூச்சி விளையாடிய 2 சிறுமிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராம்சமந்த் மாவட்டத்தை சேர்ந்த சிறுமிகள் பாயல் மற்றும் ரித்திகா இருவரும் தங்கள் வீட்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டில் பயன்படுத்தப்படாத துருப்பிடித்த பெட்டி ஒன்றிற்குள் சென்று மறைந்து கொண்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பெட்டியின் வெளியில் லாக்காகி விட்டது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிறுமிகள் இருவரும் பெட்டிலையே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே வீட்டில் இருந்தவர்கள் சிறுமிகளை தேடிய நிலையில் துருப்பிடித்த பெட்டிக்குள் இருவரும் சடலமாக இருந்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமிகளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.