மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு 2 குழந்தைகள் இருக்கு!! ப்ளீஸ் என்னையை விட்டுட்டு கதறிய இளம்பெண்... கத்தியால் சரமாரியாக குத்தி கொடூர கொலை...
கர்நாடகா மாநிலம் பெங்களூரு எடியூர் பகுதியை சேர்ந்தவர் கிரிஷ் என்ற ரியான் கான். இவர் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பரிதா கானம் என்ற பெண்ணுடன் கிரிஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பரிதாக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவர் மசாஜ் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கிரிஷ்க்கும், பரிதாவுக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். கிரிஷ், பரிதாவை திருமணம் செய்ய முடிவு சென்றுள்ளார். இது குறித்து பரிதாவிடம் பேசியுள்ளார் கிரிஷ். அதற்கு பரிதா எனக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால் திருமணம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறியாள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கிரிஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பரிதாவை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் இச்சம்பவம் குறித்து அருகே இருந்த காவல் நிலையத்தில் கூறி கிரிஷ் சரணடைந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.