மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யமுனை ஆற்றில் மூழ்கிய 4 சிறுவர்கள் பரிதாப பலி: உடல்களை தேடும் பணி தீவிரம்..!
புது டெல்லி, வடக்கு டெல்லியில் உள்ள புராரி பகுதியில் யமுனை ஆற்றில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். முன்னதாக உத்திரபிரதேச மாநிலம் லோனி பகுதியில் வசித்து வரும் வாசிம் (15), கமல் (17), இலியாஸ் (20) மற்றும் சமீர் (17) ஆகிய நாங்கு சிறுவர்களும் கடந்த வியாழக்கிழமை ஆற்றுக்கு குளிப்பதற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில், நீண்ட நேரமாகியும் அவர்கள் வீடு திரும்பாததால், இது குறித்து அவர்களது குடும்பத்தினர் லோனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் 4 சிறுவர்களையும் தேடி வந்தனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், 4 சிறுவர்களும் யமுனை ஆற்றில் குளிக்கச் சென்று தவறி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
சிறுவர்கள் 4 பேரும் ஆற்றில் மூழ்கி இறந்ததை நேரில் பார்த்த ஹரிஷ் என்பவர் உறுதிப்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இலியாஸ், வாசிம் மற்றும் கமல் ஆகிய 3 சிறுவர்களின் உடல்கள் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டன.
சமீரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர் அவற்றை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.