மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டயர் வெடித்து திரைப்பட பாணியில் எதிர் சாலையில் பாய்ந்த கார்.. வேன் மீது மோதி கோர விபத்து.. நால்வர் பரிதாப பலி.!
கண்ணிமைக்கும் நேரத்தில் காரின் டயர் வெடித்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் நகரில் இருந்து மும்பை நோக்கி கார் பயணம் செய்தது. இந்த கார் நேற்று மாலை 4 மணியளவில் மும்பை - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டு இருந்தது.
இந்த வாகனம் இகத்புரி பகுதியில் பயணம் செய்தபோது, காரின் முன்பக்க டயர் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு சுவரின் மீது மோதி எதிர்ச்சாலைக்கு சென்றுள்ளது.
அந்த சமயத்தில் அவ்வழியே வேன் வந்துவிட, வேனின் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 2 ஆண்கள், பெண்மணி, சிறுமி உட்பட நால்வர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினார். இந்த தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.