மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொடூரம்... டியூசனில் பலாத்காரம் செய்யப்பட்ட 4 வயது சிறுமி..!! டீச்சரின் தம்பி கைது.!!
தலைநகர் டெல்லியில் டியூசனுக்கு சென்ற நான்கு வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்துள்ள காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக விரைவான நடவடிக்கை எடுக்கும்படி டெல்லி ஆளுநருக்கு ஆம் ஆத்மி அரசு கோரிக்கை விடுத்திருக்கிறது.
கிழக்கு டெல்லி பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி தன்னுடைய டியூஷன் வகுப்பிற்காக ஆசிரியை வீட்டிற்கு சென்று இருக்கிறார். ஆசிரியை வீட்டில் யாரும் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டியூசன் டீச்சரின் சகோதரன் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து அழுது கொண்டே சிறுமி வீட்டிற்கு வந்திருக்கிறார்.
அப்போது சிறுமியின் உடலில் ரத்தம் வடிவதை கண்ட தாய் பதறிப் போய் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக சிறுமியை லால் பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து விசாரணை செய்த காவல்துறையினர் டியூசன் டீச்சரின் சகோதரரை கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி மேல் சிகிச்சைக்காக லால்பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் இருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமிக்கு மனநல ஆலோசனை அளிக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. தலைநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை தடுக்க ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்திருக்கிறது.