மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வியட்நாம் இருந்து கடத்திவரப்பட்ட 45 துப்பாக்கிகள்; டெல்லி விமான நிலையத்தில் பறிமுதல்..!
டெல்லி விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்ட்டன.
பன்னாட்டு விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இரண்டு டிராலி பேகில் இருந்து 22 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வியாட்நாமில் இருந்து இந்த துப்பாக்கிகளை கடத்தி வந்த இந்திய தம்பதியினர் இரண்டு பேர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரி ஒருவர் கூறும்பேது,
பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள் உண்மையானதா, என்பதை பாலிஸ்டிக்ஸ் அறிக்கை உறுதிப்படுத்தும் என்றும், முதற்கட்ட அறிக்கையில், துப்பாக்கிகள் செயல்படும் , பயன்படுத்த முடியும் என்பது தெரிந்துள்ளது, என தெரிவித்தார்.