மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நெஞ்சை பதறவைக்கும் கொடூர விபத்து.. ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 6 பேர் பலி..
ஆந்திராவில் ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் 14 கூலித் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ ஒன்று இன்று அதிகாலை கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது வேகமாவாக வந்துகொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று ஆட்டோ மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் ஷேர் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த 5 பேர் சம்பவ இடத்திலையே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார். இதன்மூலம் இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.