மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
டெல்லியில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 7 பேர் கொண்ட கும்பல் கைது.! 6 பெண்கள் மீட்பு.!
கடந்த மார்ச் 9ஆம் தேதி, டெல்லியில் உள்ள ஷாஹ்தாரா பகுதியில் விபச்சாரத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
நவநீத் என்பவரிடம் 1500 ரூபாய் கொடுத்து ஒரு வாடிக்கையாளரை போல் நடித்து செய்திகளை சேகரிக்க காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். அவர் கரண் சத்தா என்ற புரோக்கரை சந்தித்தார்.
அந்த புரோக்கர் நவநீத்தை சில பெண்களை விபச்சாரத்துக்கு சப்ளை செய்து வந்த ஒரு பெண்ணிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு நவநீத் சமிங்கை செய்யவே, உடனடியாக விரைந்து வந்த காவல்துறையினர் இந்த செயலில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் 6 பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.