மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏழு வயது சிறுவனை பாலியல் தொல்லை அளித்த... 53 வயது தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை..!
ஏழு வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 53 வயதான ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
போபால், மத்தியபிரதேச மாநிலம் ராஜ்கட் மாவட்டம் விக்யான் நகரை சேர்ந்த கட்டிட தொழிலாளி அம்ரித்லால் (53). இவர் கடந்த வருடம் நவம்பர் 24-ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுவனுக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று அங்கு வைத்து அந்த சிறுவனை அம்ரித்லால் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார்.
இது பற்றி சிறுவன் தனது தந்தையிடம் கூறியுள்ளான். இதைகேட்டு ஆத்திரமடைந்த சிறுவனின் தந்தை, அம்ரித்லால் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த அம்ரித்லாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், அம்ரித்லால் மீதான வழக்கு கோடா போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அம்ரித்லால் குற்றவாளி என நேற்று அறிவிக்கப்பட்டது. மேலும், குற்றவாளி அம்ரித்லாலுக்கு ஆயுள் தண்டனை விதித்து, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.