மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டுப்பாட்டை இழந்த கார் லாரி மீது மோதி விபத்து.. மூவர் பலியான நிலையில் 4 பேர் கவலைக்கிடம்..!
அசாம் மாநிலம் டின்சுக்கியாவிலிருந்து திமாகுச்சி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் ஓட்டுனர் உட்பட 5 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த காரானது சைக்கியாசுபரி பகுதியில் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கட்டுப்பாட்டை இழந்த காரானது தாறுமாறாக ஓடி எதிரே வந்த லாரியின் மீது அதிபயங்கரமாக மோதியது. இந்தக் கோர விபத்தில் காரில் பயணம் செய்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த மற்றவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.