மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வயது சிறுவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி சித்திரவதை செய்த தாய்... கேரளாவில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அட்டப் பள்ளம் பகுதியை சேர்ந்த ஏழு வயது சிறுவன் ஒருவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்நிலையில் சம்பவத்தினத்தன்று சிறுவன் வீட்டின் அருகில் இருந்த டயரை எடுத்து வந்து வயலில் எரித்து விளையாடியுள்ளான்.
இதனை அவதனித்த சிறுவனின் பெற்றோர் சிறுவனை கடுமையாக அடித்துள்ளனர். அத்துடன் விடாமல் சிறுவனின் தாய் தோசை கரண்டியை நன்கு பழுக்க காய்ச்சி சிறுவனுக்கு சூடு வைத்து துன்புறுத்தியுள்ளார். அதிலும் ஆத்திரம் தீராத சிறுவனின் தாய் கொஞ்சமும் இரக்கம் இன்றி சிறுவனின் கண்ணில் மிளகாய் தூள் தூவி துன்புறுத்தி வந்துள்ளார்.
இதனை கவனித்த பெண் ஒருவர் பஞ்சாயத்து தலைவரிடம் கூறவே இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதனையடுத்து சிறுவனின் தாயை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.