மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகளின் கண் முன்னே ... மனைவியின் பிறப்புறுப்பில் கத்தியால் குத்திய கொடூரம்... கணவனை கைது செய்த காவல்துறை.!
கர்நாடக மாநிலம் பெங்களூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் அவரது பிறப்புறுப்பு மற்றும் வயிறு ஆகிய இடங்களில் கத்தியால் குத்தி கிழித்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் வசித்து வருபவர் பிரியங்கா இவரது கணவர் தயானந்தா. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரியங்காவின் கணவர் தயாநந்தா ஒரு கொலை வழக்கில் கைதாகி பல மாதங்களாக சிறையிலிருந்து விட்டு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தான் வெளியே வந்திருக்கிறார்.
இந்நிலையில் நேற்று குடிபோதையில் நள்ளிரவு நேரம் வீட்டிற்கு வந்த தயானந்தா அவரது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்திருக்கிறார். மேலும் ஆத்திரத்திலிருந்தஅவர் சமையலறையில் இருந்து கத்தியை எடுத்து குழந்தைகளின் கண்முன்னேயே மனைவியின் பிறப்புறுப்பில் குத்தி இருக்கிறார். மேலும் அவரது வயிற்றிலும் பலமாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த பிரியங்காவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தயானந்தாவை பிடித்ததோடு காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் படுகாயம் அடைந்த பிரியங்காவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மனைவியின் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய தயானந்தாவை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.