மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதுக்கு சம்மதிக்கல... அவளை கொன்று விட்டேன்... கணவர் பரபரப்பு வாக்குமூலம்.!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உறவுக்கு மறுத்ததால் மனைவியை கணவனே கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தருண் வயது 24.
இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சி(20) என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த மே மாதம் இருபதாம் தேதி ஜான்சி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்ததாக தரும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் ஜான்சியின் தந்தை தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்தப் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தருணிடம் விசாரணை நடத்தினர் இதில் அவர் தனது மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் . மனைவியிடம் நெருக்கமாக இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார்.
அதற்கு அவரது மனைவி சோர்வாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். இவர் அதையும் மீறி வலுக்கட்டாயமாக அவருடன் உறவு கொள்ளும் முயற்சித்திருக்கிறார் அப்போது ஜான்சி கணவரை தள்ளிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தருண் மனைவியின் கழுத்தை நெரித்து இருக்கிறார் இதனால் அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்திருக்கின்றனர். இதனால் தனது மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடி இருக்கிறார் தருண். தற்போது காவல்துறையின் விசாரணையில் அவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார்.