மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அத்தையுடன் கள்ள காதல்.! இளைஞர் செய்த விபரீத செயல்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள யாரடோனா கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. அவரது கணவர் 2 வருடங்களுக்கு முன்பு காலமானார். அதன் பின்பு தனது மகனுடன் வசித்து வந்த அவர், பிழைப்புக்காக கூலி வேலை செய்து வந்தார். கட்டிட வேலை செய்யும் இடத்தில் தேவப்பா(22) என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜயலட்சுமி தேவப்பாவிற்கு அத்தை முறையாவார்.
இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இது குறித்து அறிந்த விஜயலட்சுமியின் அண்ணன் இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் விஜயலட்சுமி தேவப்பாவுடன் பழகுவதை நிறுத்திக் கொண்டார்.
ஆனாலும் தேவப்பா அந்தப் பெண்ணை மீண்டும் உல்லாசமாக இருப்பதற்கு வற்புறுத்தி உள்ளார். இதனை விஜயலட்சுமி மறுத்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். விஜயலட்சுமியைச் சந்தித்து கடைசியாக ஒரு முறை உல்லாசமாக இருப்பதற்கு தேவப்பா அழைத்துள்ளார். அதன்பின் தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் கூறியுள்ளதை நம்பி, விஜயலட்சுமி மறைவாக உள்ள ஒரு பகுதிக்கு சென்று தேவப்பாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.
அப்போது தனது சுயருபத்தை காட்டிய தேவப்பா, அங்கிருந்த ஒரு கல்லைக் கொண்டு விஜயலட்சுமியை பலமாக தாக்கியுள்ளார். அந்தப் பெண் அணிந்திருந்த சேலையால், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்பு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், விஜயலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு தலைமறைவான தேவப்பாவின் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.