9 ஆண்டு கால குடும்பப் பகை.! பகை தீர்க்க ஒருவர் பலி.!



A man was killed due to family dispute over a property

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் இருக்கும் நாகதேவனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னப்பா (41). மார்ச் 12ஆம் தேதி காலை, அவர் தனது வீட்டில் சடலமாக கிடந்தார். சம்பவம் மறைந்து விரைந்து வந்த காவல் துறையினர் இறந்த சென்னப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் குடும்பப் பகை காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

karnataka

இந்தக் கொலையில் அதே ஊரைச் சேர்ந்த தேவராஜ், மஞ்சுநாத், நரசிம்மையா ஆகிய மூன்று பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட முரளி என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 

இறந்த சென்னப்பா, அப்பையா என்பவரின் மருமகன் ஆவார். அப்பையா மற்றும் நரசிம்மையாவின் குடும்பத்தினர்கள் நெருங்கிய உறவினர்கள் ஆவர். இரு குடும்பங்களுக்கிடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

karnataka

இதில் நரசிம்மையாவின்  மகன் 2015 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் நரசிம்மையாவின் குடும்பத்தினர் அப்பையாவின் மீதும், அவரது குடும்பத்தின் மீதும் கடும் கோபத்தில் இருந்தனர். அவரை பழிவாங்கும் நோக்கில் அவரது மருமகன் சென்னப்பாவை கொலை செய்துள்ளதாக தெரிகிறது. நிலத்தகராறு தொடர்பாக 9 ஆண்டுகள் கழித்து ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.