தனக்கு கீழே பணிபுரியும் காவலர்களை துணிதுவைக்க, மசாஜ் செய்ய, கட்டாயப்படுத்திய உயர் அதிகாரி... பெரும் சர்ச்சையை கிளப்பிய சம்பவம்..!
பெண் காவலர்களை, காவல்துறை உயர் அதிகாரி துணி துவைக்கவும், மசாஜ் செய்யவும் சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் நான்கு பெண் காவலர் உட்பட ஏழு காவலர்கள், டிஎஸ்பி அளவிலான அதிகாரி ஒருவர் மற்ற காவல்துறை பணியாளர்களை மசாஜ் செய்யவும், துணி துவைக்கவும் கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பாட்னாவின் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு (SSP) புல்வாரி ஷெரீப்பின் துணை-பிரிவு காவல் அதிகாரி (SDPO) சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை மசாஜ் செய்யவும் மற்றும் அவரது வீட்டில் துணிகளை துவைக்க வைக்கின்றனர் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட எஸ்.டி.பி.ஓ தங்களை அடிப்பதாகவும், மறுத்தால் சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டுவதாகவும் காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பீகாரில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.