மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கார் கண்ணாடியை நேக்காக உடைத்து திருட்டு - நேரில் செய்து காண்பித்து ஷாக் கொடுத்த திருடன்.. பகீர் வீடியோ.!
திருடன் காரின் கண்ணாடியை எப்படி உடைத்து திருடுவேன் என செய்து காண்பித்து அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த சம்பவம் விசாரணையின் போது நடந்துள்ளது.
திருடன்கள் இருக்கும் வரை நமது பொருட்களை பாதுகாப்பது நமது தலையாய கடமையாகவும் மாறிவிடுகிறது. இன்றளவில் குற்றங்கள் பல்வேறு அளவில் நடைபெறுகிறது. 5 சவரன் நகைக்காக சாலையில் நடக்கும் வழிப்பறி முதல் கொலைகள் வரை என ஒவ்வொன்றும் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது.
சில நேரங்களில் வாகனங்கள், அதில் வைக்கப்படும் பொருட்கள் என கொள்ளையடிக்கப்படும் சம்பவமும் நடக்கத்தான் செய்கிறது. இந்த நிலையில், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு செல்லும் கார்களின் கண்ணாடியை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட திருடன் காவல்துறையினர்வசம் சிக்கி இருக்கிறான்.
அவன் எப்படி கார்களின் கண்ணாடியை உடைத்து திருடுகிறான்? என்பதை செய்துகாண்பிக்க காவல் துறையினர் கைவிலங்கோடு அழைத்து சென்றுள்ளனர். அப்போது, கைகளில் இழுவிசைக்கு ரப்பர் போன்றவற்றை உபயோகம் செய்தவன், சிறிய கற்கள் மற்றும் கண்ணாடி துண்டுகளை வைத்து, கண்ணாடி நோக்கி இழுத்து விட்டதும் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து விடுகிறது.
இவ்வாறு கண்ணாடியை உடைத்துதான் திருடுகிறேன் என்று குற்றவாளி தனது வாக்குமூலத்தை பதிவு செய்து, அதனை செய்தும் காண்பித்துள்ளான். இந்த திருட்டு நடவடிக்கை குறித்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், கார்களில் விலையுயர்ந்த பொருட்களை மக்கள் வைத்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.