மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓடும் ரயிலில் கைக்குழந்தையுடன் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை... 2 இளைஞர்கள் கைது.!
மேற்கு வங்க மாநிலத்தில் கை குழந்தையுடன் இருந்த பெண்மணியை ஓடும் ரயிலில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அசாம் மாநிலம் கௌஹாத்தியிலிருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள அலிப்பூர் துவார் என்ற பகுதிக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இளம் பெண் ஒருவர் தனது கை குழந்தையுடன் பயணம் செய்திருக்கிறார். அந்தப் பெண்மணி அலிப்பூர்துவார் பகுதிக்கு சென்று இருக்கிறார்.
ரயில் அசாமின் ஃபகிராகிராம் ரயில் நிலையத்தை அடைந்தபோது பெரும்பாலான பயணிகள் இறங்கி விட்டனர். இதனால் அந்தப் பெண்மணி கை குழந்தையுடன் தனியாக இருந்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட இரண்டு இளைஞர்கள் அவரது கை குழந்தையை கொன்று விடுவதாக கூறி அந்த பெண்ணை சித்திரவதை செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ரயில் அலிப்பூர் துவார் ஜங்ஷனை வந்தடைந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி ரயில்வே காவலர்கள் இடம் அந்தப் பெண் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நைனால் அப்துல் (25) மற்றும் மைனுல் ஹக் (26) என்ற இளைஞர்களை கைது செய்து அவர்கள் மீது கொலை முயற்சி மற்றும் கற்பழிப்பு போன்ற வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.