மீண்டும் ஒரு வெறிச்செயல்; மனைவியை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூரம்..!



Again a frenzy; The brutality of cutting his wife into pieces and throwing her in the river..

சந்தேகத்தால் மனைவியை துண்டாக வெட்டி கால்வாயில் வீசிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங் மாவட்டத்தின் சிலிகுரி பகுதியில் வசிப்பவர் முகமது அன்சாருல். இவருக்கு ஆறு வருடங்களுக்கு முன் ரேணுகா காத்தூன் என்பவருடன் திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் ரேணுகா காத்தூனை கடந்த 24-ஆம் தேதியில் இருந்து காணவில்லை. பெண்ணின் குடும்பத்தினர் சந்தேகத்தின் பேரில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

காவல்துறையினர் கணவர் முகமதுவை பிடித்து விசாரணை நடத்தினர். அதன் விவரம் வருமாறு:- சமீபகாலமாக மனைவி ரேணுகாவின் நடத்தை மீது கணவர் முகமதுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. ரேணுகா அழகு பயற்சி வகுப்பில் சேர்ந்து பியூடிசியனாக பயிற்சி பெற்று வந்தார். இதன் காரணமாக பல முன்பின் தெரியாத ஆண்களிடம் ரேணுகா பேசியது கணவர் முகமதுவுக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் கிறிஸ்துமஸ்க்கு முந்தைய தினம் அவரது பைக்கில் ரேணுகாவை  அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காவ்வாய் பகுதிக்கு சென்றுள்ளார். 

அங்கு வைத்து ரேணுகாவை  கொலை செய்து துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை சாக்குப் பையில் போட்டு மகாநந்தா நதியில் வீசியுள்ளார். மாநில பேரிடர் மீட்பு குழு கால்வாயில் ரேணுகாவின் உடல் பாகங்களை தேடினர். நீண்ட நேரம் தேடிய பின்னர் போலீசாசார் ஒரு சூட்கேஸில் உடற்பகுதியைக் கண்டுபிடித்தனர், ஆனால் தலை மற்றும் பிற உறுப்புகள் இன்னும் கிடைக்கவில்லை.