தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்தியாவில் மேலும் 54 சீன ஆப்களுக்கு ஆப்பு.! லிஸ்ட்டில் எந்த ஆப்லாம் இருக்கு தெரியுமா.?
இந்தியாவில் மீண்டும் சீனாவைச் சேர்ந்த 54 ஸ்மார்ட் போன் ஆப்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2020ம் ஆண்டு இந்தியா - சீனா இடையே எல்லைப்பிரச்சனை பெரிதாக வெடித்தது. அப்போது லடாக்கில் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய சீனா, 15 வீரர்களை கொன்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியது.
அந்த சமயத்தில் இந்தியர்களின் தகவல்களை திருடுவதாகவும், அதனை வைத்து வியாபாரம் செய்வதாகவும் சீன செயலிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதன்காரணமாக டிக்-டாக், ஷேர் இட், யூசி பிரவுசர், ஹலோ, அலி எக்ஸ்பிரஸ், லைகி, மி கம்யூனிட்டி, வீ சேட் உள்ளிட்ட 59 சீன செயலிகள் நிரந்தரமாக முடக்கப்பட்டது.
இந்தநிலையில், மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் 54 சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இந்த 54 பயன்பாடுகள் பல்வேறு முக்கியமான அனுமதிகளைப் பெறுகின்றன மற்றும் முக்கியமான பயனர் தரவைச் சேகரிக்கின்றன. இந்த சேகரிக்கப்பட்ட நிகழ்நேர தரவு தவறாகப் பயன்படுத்தப்பட்டு, விரோத நாட்டில் அமைந்துள்ள சர்வர்களுக்கு அனுப்பப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
தடைசெய்யப்பட்ட செயலிகளின் பட்டியலில் Sweet Selfie HD, Beauty Camera - Selfie Camera, Garena Free Fire - Illuminate, Viva Video Editor, Tencent Xriver, Onmyoji Arena, AppLock மற்றும் Dual Space Lite ஆகிய செயலிகள் அடங்கும்.