மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போதையில் இருந்த ஏர் இந்தியா விமானியின் லைசென்ஸ் பறிப்பு; அதிர்ச்சி அடைந்த பயணிகளால் பெரும் பரபரப்பு.!
விமான பணியின்போது போதையுடன் இருந்த விமானியின் லைசென்ஸ் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் விமான நிலையத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகர் டெல்லியிலிருந்து தாய்லாந்தில் உள்ள பாங்காக்கிற்கு நேற்று பகல் 1:15 க்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது அதில் துணை விமானி ஆக பயணம் செய்தவர் அரவிந்த் கத்பாலியா.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு ஏன் இறக்கப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டபோது அதிர்ச்சியான தகவலை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதாவது விமானம் புறப்படுவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அரவிந்த் கத்பாலியா நைஸாக தப்பிச் சென்றது பிறகு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவ்வாறு திருட்டுத்தனமாக போதையில் பயணம் செய்ததால் அப்பொழுது மூன்று மாதம் அவருடைய லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டது. தற்பொழுது மீண்டும் சிக்கியுள்ளதால் மூன்று ஆண்டுகள் அவருடைய லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு பறிக்கப்பட்டுள்ளது. பிறகு மீண்டும் ஏழு மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் புறப்பட்டு சென்றது.