மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
துவங்கியது மீட்பு பணி; பல்வேறு நாடுகளுக்கு பறந்த 10 ஏர் இந்திய விமானங்கள்!
கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கியுள்ள இந்த சமயத்தில் பல்வேறு நாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்டு வர 10 ஏர் இந்திய விமானங்கள் வெளிநாடுகளுக்கு மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்று காரணமாக கடந்த 40 நாட்களுக்கு மேலாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன. இதனால் வெளிநாடுகளில் பணி மற்றும் சுற்றுலாவிற்காக சென்ற பல்வேறு இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பலரும் தங்கள் வேலையினை இழந்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்து வருவதற்காக 10 ஏர் இந்திய விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 19 லட்சம் இந்தியர்களை மீட்கும் இந்த திட்டத்தின் முதல்கட்டமாக அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், ஓமன், வங்கதேசம், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து பலர் மீட்கப்பட உள்ளனர். இந்த முதல்கட்ட சேவை மே 7 முதல் மே 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது இலவச சேவையாக இல்லாமல் கட்டண சேவை தான் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.