மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கொரோனாவால் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அமித்ஷா! என்ன கூறியுள்ளார் தெரியுமா?
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனாவால் பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர். சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்துறை மந்திரி அமித்ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவிலுக்கு நேற்று 5-ஆம் தேதி பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட 170 முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதால், ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க இயலவில்லை.
प्रभु श्री राम मंदिर निर्माण असंख्य नाम-अनाम रामभक्तों के सदियों के निरंतर त्याग, संघर्ष, तपस्या और बलिदान का परिणाम है।
— Amit Shah (@AmitShah) August 5, 2020
आज के दिन मैं उन सभी तपस्वियों को नमन करता हूँ जिन्होंने इतने वर्षों तक सनातन संस्कृति की इस अमूल्य धरोहर के लिए संघर्ष किया।
जय श्री राम!
இந்தநிலையில், இந்த விழா குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்த நாள், வரலாற்று சிறப்புமிக்க, பெருமைக்குரிய நாள். ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதன் மூலம், இந்திய வரலாற்றில் ஒரு தங்க அத்தியாயத்தை பிரதமர் மோடி எழுதி உள்ளார். ராம பக்தர்களின் நூற்றாண்டு கால தியாகம், போராட்டம் ஆகியவற்றின் விளைவுதான், இந்த கோவில் கட்டுமானம். பிரதமர் மோடியின் வலிமையான, உறுதியான தலைமையை இது உணர்த்துகிறது என தெரிவித்தார்.
இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்திற்காக இத்தனை ஆண்டுகளாக போராடிய அனைவருக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன். இந்த மறக்க முடியாத நாளில் அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்திய கலாச்சாரத்தையும் அதன் மதிப்புகளையும் பாதுகாக்க மோடி அரசு எப்போதும் உறுதியுடன் இருக்கும் என தெரிவித்தார்.