"கொரோனா காதல்..." 3 கொலையில் முடிந்த கொடூரம்... கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்த கணவர்.!
அசாம் மாநிலத்தைச் சார்ந்த பொறியாளர் தனது மனைவி மற்றும் அவரது பெற்றோரை கொலை செய்துவிட்டு ஒன்பது மாத கைக்குழந்தையுடன் காவல் துறையிடம் சரணடைந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
அசாம் மாநிலம் கோலாகட் மாவட்டத்தைச் சேர்ந்த நஜீப் ரஹ்மான் என்ற நபருக்கு 2020 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகமானவர் சங்கமித்ரா. பழகிய சிறிது நாட்களிலேயே இருவரும் காதலிக்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து 2020 ஆம் வருடம் அக்டோபர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சங்கமித்ராவின் பெற்றோர் அவரை தங்களுடன் அழைத்துச் சென்றனர். சங்கமித்ராவின் மீது திருட்டு பலி மத்திய வரை சிறையிலும் அடைத்தனர்.
இந்நிலையில் சிறையில் இருந்து வெளியேறிய சங்கமித்ரா தனது காதல் கணவர் நஜீபுர் ரஹ்மானுடன் சென்னையில் சில மாதங்கள் வசித்து வந்தார். பின்னர் இருவரும் கோலாகட்டுக்கு திரும்பினர். கர்ப்பமாக இருந்து சங்கமித்ராவுக்கு ஆண் குழந்தை ஒன்று நவம்பர் மாதம் பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக கடந்த மார்ச் மாதம் காவல்துறையிடம் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து நஜிபுர் ரஹ்மான் கைது செய்யப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியேறிய நஜிபுர் ரஹ்மான் தனது குழந்தையை பார்ப்பதற்காக சங்கமித்ரா வீட்டிற்கு சென்று இருக்கிறார் ஆனால் அது பெற்றோர் மற்றும் மனைவி சம்மதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தனது மனைவி மற்றும் அவரது பெற்றோரை கொலை செய்துவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.