Mid Week Eviction: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஷாக் செய்தி.. மிட் வீக் எவிக்சன் அறிவிப்பு.!
கணவன் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை! கள்ளகாதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூர செயல்.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் நவீன். நவீன் சமீபத்தில் சாலை விபத்தில் உயிர் இழந்ததாக கூறப்பட்டது. நவீன் சாலை விபத்தில் இறக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதில், நவீனின் மனைவி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில் தனது கள்ள காதலனுடன் சேர்ந்து தான் தான் தனது கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் நவீனின் மனைவி. இது பற்றி அவர் கூறுகையில், வெங்கடேஷ் என்பவருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ள காதலாக மாறியது.
இந்த தகவல் தனது கணவருக்கு தெரியவர அவர் என்னை கண்டித்தார். இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதன்படி தனது கள்ள காதலன் வெங்கடேசுடன் சேர்ந்து திட்டம் தீட்டி, தனது கணவனை கரி வாங்க வெளியே அனுப்பினேன்.
அவர் வெளியே சென்றதும் வெங்கடேசுக்கு தகவல் கொடுத்தேன் அவர் பெரிய இரும்பு கம்பி ஒன்றால் நவீனை அடித்து கொலை செய்துவிட்டு, மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து அதில் நவீனுக்கு தலையில் அடிபட்டு இறந்ததுபோல் ஏற்பட்டு செய்துவிட்டார் என கூறியுள்ளார்.
இதனை அடுத்து நவீனின் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் வெங்கடேஷ் இருவரையும் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துளனர்.