மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: திருமண வீட்டார் சென்ற அரசு பேருந்து 30 அடி கால்வாயில் கவிழ்ந்து விபத்து; 7 பேர் பலி, 20 பேர் படுகாயம்.!
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா பகுதியில், அரசு பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்தை திருமண வீட்டார் வாடகைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் ஓட்டுநர் தூக்கத்தில் இருந்ததால், பேருந்து சாலையோரம் இருந்த 30 அடி கால்வாயில் பாய்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 20 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பேருந்தில் 40 பேர் பயணம் செய்த நிலையில், எஞ்சியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.