மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்மரங்கள் கடத்தல் எதிரொலி; வாகன சோதனையில் தமிழர்கள் ஆந்திராவில் கைது.!
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, ஷேஷாலாம் வனப்பகுதியில் செம்மரம் கடத்தப்படுகிறது என சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளை உஷார்படுத்திய நிலையில் வாகன தணிகையின் போது 2 கார்களை சோதனை செய்துள்ளனர். அப்போது, செம்மரம் கடத்தி வரப்பட்டது உறுதியானது.
இரண்டு கார்களிலும் 8 செம்மரக்கட்டைகள் இருந்த நிலையில், கார் மற்றும் செம்மரங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், காரில் பயணம் செய்த ஆந்திராவை சேர்ந்த 3 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 8 பேர் என 11 பேர் கைது செய்யப்பட்டனர்.