தமிழே தெரியாது, ஆனால் பாடல் மட்டும் தெரியும் - சிறுமியின் நெகிழ்ச்சி பாட்டு.. வீடியோ வைரல்.!
இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா!
கடந்த 2018 ஜனவரி மாதம் இந்திய தேர்தல் ஆணையராக அசோக் லவாசா நியமிக்கப்பட்டார். வரும் 2022 ஆம் ஆண்டு வரை அவருக்கு பதவி காலம் உள்ளது. இந்த நிலையில், திடீரென கடந்த மாதம் அவரை ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக உள்ள திவாகர் குப்தா ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற உள்ளதையடுத்து, அந்த பதவிக்கு அசோக் லவாசா நியமிக்கப்படுவதாகவும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையர் பொறுப்பில் இருந்து அசோக் லவாசா ராஜினாமா செய்துள்ளார்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து அசோக் லவாசா ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். அதில், ஆகஸ்ட் 31ம் தேதி தன்னை தேர்தல் ஆணையர் பதவியில் இருந்து விடுவிக்கும்படி கூறி உள்ளார்.