மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிஞ்சு குழந்தையை ரூ.4 இலட்சத்திற்கு விற்க முடியாததால் ஆத்திரம்; 11 நாட்களேயான பச்சிளம் சிசுவை எரித்துக்கொன்ற கொடும்பாவி தந்தை.!
தனது மனைவிக்கு பிறந்த சொந்த குழந்தையை விற்பனை செய்ய இயலாத ஆத்திரத்தில் தந்தை செய்த கொடூர செயல் நெஞ்சை பதறவைத்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள பஜாளி மாவட்டம், தூபி மளிபாரா பகுதியை சேர்ந்தவர் நிரஞ்சன் மலக்கார். இவரின் மனைவி சமீபத்தில் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை பிறந்து 11 நாட்களே ஆகின்றன.
இந்நிலையில், நிரஞ்சன் தனது சகோதரருக்கு தொடர்பு கொண்டு, குழந்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதால் இடுகாட்டில் எரித்துவிட்டேன் என கூறி இருக்கிறார்.
இதனால் அதிர்ந்துபோனவர் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, காவல் துறையினருக்கு தகவல் சொல்லியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், நிரஞ்சனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதிகாரிகள் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில் நிரஞ்சன் தனது குழந்தையை ரூ.4 இலட்சம் பணத்திற்கு விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளார். முதலில் குழந்தையை வாங்க ஒப்புக்கொண்ட நபர்கள், பின் மறுப்பு தெரிவித்ததாக தெரியவருகிறது.
இந்த சம்பவத்தால் குழந்தையை விற்பனை செய்ய இயலாமல் தவித்த நிரஞ்சன், ஆத்திரத்தில் குழந்தையை கொலை செய்து எரித்து சாம்பலை ஆற்றில் வீசி இருக்கிறார்.
நிரஞ்சன் மருத்துவரிடம் உதவியாளராக பணியாற்றி வரும் நிலையில், நீண்ட காலமாக குழந்தை வரம்வேண்டி காத்திருந்த தம்பதியின் தகவலை திருட்டுத்தனமாக மருத்துவரிடம் இருந்து பெற்றுள்ளார்.
பின்னர் அதனை வைத்து சம்பந்தப்பட்ட செல்வந்தர்களான தம்பதியிடம் பேசி இருக்கிறார். அவர்களும் முதலில் ரூ.4 இலட்சம் பணத்திற்கு குழந்தையை வாங்க ஒப்புக்கொண்டு, பின் தயங்கி இருக்கின்றனர் என்பது அம்பலமானது.