#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் பகீர்; இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம்.. வேலை வாங்கிக்கொடுப்பதாக கொடுமை.!
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இளைஞர் தன்னை வங்கி ஊழியர் என அறிமுகம் செய்துகொண்டுள்ளார்.
மேலும், சம்பந்தப்பட்ட அப்பெண்ணுடன் பழகிய நபர், உங்களுக்கும் வங்கியில் வேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார். கயவனின் வார்த்தைகளை நம்பிய இளம்பெண், இளைஞர் அழைத்ததன் பேரில் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள விடுதிக்கு சென்றுள்ளார்.
குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுமை
அங்கு வங்கிவேலைக்கான நேர்காணல் நடப்பதாக கூறி அழைத்து செல்லப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் பெண்ணின் இன்ஸ்டாகிராம் நண்பர் இருந்துள்ளார். அங்கு பெண் குடிக்க குளிர்பானம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை குடித்த இளம்பெண் மயங்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: ரூ.600-க்காக மகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை; தூக்கத்திலேயே பறிபோன உயிர்.!
மயங்கிய இளம்பெண்ணை கூட்டாக சேர்ந்து கும்பல் பலதார செய்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்மணி காவல்நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: ஊழலை எதிர்த்ததால் கார் ஏற்றி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நபர்; உ.பி-யில் பயங்கரம்.!