மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை கொன்று சடலத்துடன் உடலுறவு: ஒரு மாதமாக சதித்திட்டம் தீட்டி 3 கும்பல் வெறிச்செயல்.! நெஞ்சை பதறவைக்கும் கொடுமை.!
அசாம் மாநிலத்தில் உள்ள க்ரீம்கன்ச் தேசிய நெடுஞ்சாலை பகுதியில், கடந்த செப்.09ம் தேதி, வீட்டில் தனியே இருந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் அவர் கூட்டுப்பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டது உறுதியானது. அதாவது, சிறுமி கொலை செய்யப்பட்ட பின்னர், அவரை மூவர் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது உறுதியானது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், சிறுமியின் செல்போன் பதிவுகள் மற்றும் அங்கு குறிப்பிட்ட நேரமான இரவு 11 மணியளவில் பயன்பாட்டில் இருந்த செல்போன் தரவுகளை சேகரித்து இருக்கின்றனர்.
இறுதியில் சிறுமியை கொலை செய்ததாக பிப்லாப் பால், ஸுப்ரா மலகர், ராகுல் தாஸ் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் மூவரும் இருந்துள்ளனர்.
இதற்காக சிறுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்த அவர்கள், பெற்றோர் எப்போது வேலைக்கு சென்று வருவார்கள் என கண்காணித்து இருக்கின்றனர். சம்பவத்தன்று சிறுமி வீட்டில் தனியே இருப்பதை மூவரும் அறிந்துகொண்டு சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அங்கு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கவே, சிறுமி மறுப்பு தெரிவித்தால் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டு, பின் சடலமாக கிடந்த சிறுமி பலாத்தாரம் செய்யப்பட்டுள்ளார். இந்த உண்மையை தொடர் விசாரணைக்குப்பின் கண்டறிந்த காவல் துறையினர் மூவரையும் கைது செய்தனர்.
இவர்களில் முக்கிய குற்றவாளியான ராகுல் தாஸ், மத்திய இரயில்வே துறையில் நான்காம் நிலை ஊழியர் ஆவார். கடந்த ஒரு மாதமாக சதித்திட்டம் தீட்டி, சிறுமியுடன் செல்போனில் நல்லவன் போல பேசி தொடர்பில் இருந்து இந்த கொடூரத்தை அரங்கேற்றியதும் அம்பலமானது.