மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"நான் ரேப் பண்ண போனேன்., கத்துனா கொன்னுட்டேன்" - 14 வயது சிறுமியை கொலை செய்த 44 வயது காமக்கொடூரன் பகீர் பேட்டி..!
சிறுமியை பலாத்காரம் செய்யும் முயற்சி தோல்வியடைந்து அவரை கொலை செய்த கயவன், நான் எனது தவறை ஒப்புக்கொள்கிறேன் என செய்தியாளர்களை சந்தித்து பேசிய பகீர் சம்பவம் அசாமை அதிரவைத்துள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள சோனித்பூர் மாவட்டத்தில் 14 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமியின் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றுவிட, அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்தார். மேலும், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததற்கான அடையாளம் தென்பட்டுள்ளது.
இதனால் அதிர்ந்துபோன குடும்பத்தினர் தேகியாஜுலு காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்துகையில், சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 44 வயது நபர் ஹஸ்ரத் அலி என்பவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடந்த விசாரணையில் சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஹஸ்ரத் அலிக்கு, சிறுமியின் மீது பார்வை இருந்தது அம்பலமானது. சம்பவத்தன்று அவரின் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்றிருந்த தகவல் அறிந்த கயவன், அவரை எப்படியாவது பலாத்காரம் செய்ய வேண்டும் என எண்ணியுள்ளான்.
சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து உறக்க நிலையில் இருந்த சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சிக்கவே, அவர் எழுந்து பதற்றத்தில் கத்த தொடங்கி இருக்கிறார். இதனால் பதற்றமான ஹஸ்ரத் அலி, சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளான். மேலும், காவல் நிலையத்தில் தனது தவறினை ஒப்புக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளான்.
இதனையடுத்து, ஹஸ்ரத் அலியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த தகவலை ஹஸ்ரத் அலி செய்தியாளர்கள் சந்திப்பில் போட்டியாகவும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.