கொரோனா பணியில் இளம் இந்திய மாணவியை பாராட்டிய ஆஸ்திரேலியா! இந்தியாவிற்கே பெருமை சேர்த்த இளம்பெண்!



austrelia appriciate indian girl

கேரளாவின், கோட்டயம் மாவட்டம் கருப்பந்துரா பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஷேரன் வர்கீஸ். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு படிக்க சென்றார். அவர் அங்கிருக்கும் வொல்லன்காங்க் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நர்ஸிங் படிப்பு இறுதி ஆண்டு படித்தார். இவருக்கு அதன் பின் அங்கு அவருக்கு செவிலியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. 

ஆனால், ஷேரன் வர்கீஸ் முதியோர் இல்லத்தில் சேர்ந்து பணியாற்றினார். இவருடன் பல நாடுகளைச் சேர்ந்த செவிலியர் மாணவர்களும் பணியாற்றி வந்துள்ளனர். ஷேரன் வர்கீஸ் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் கொரோனா தாக்குதல் தொடங்கியது. இந்தநிலையில் ஷேரன் வர்கீஸ், தான் பணியாற்றிய முதியோர் இல்லத்தில் மிகுந்த கவனமுடனும், அக்கறையுடனும் செயல்பட்டார். வெளியில் இருந்து வரக்கூடியவர்கள் அனைவரையும் வராமல் தடுத்ததுடன், உள்ளேயே தங்கியிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் உதவிகளைச் செய்துவந்தார்.

austrelia

கொரோனா தடுப்புப் பணிகளை சர்வதேச சமூகத்தினர் மேற்கொண்ட விதம் குறித்து வீடியோ வெளியிடுமாறு ஆஸ்திரேலியாவின் அரசு அமைப்பான ஆஸ்டிரேட் கேட்டுக்கொண்டது. அதில், ஷேரன் வர்கீஸ் தன் பணிகள் குறித்து பேசுகையில், தங்கள் முதியோர் இல்லத்தில் கொரோனா நுழைந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டோம். பணிக்கு வருபவர்களின் உடை மூலம் கிருமி வந்துவிடக் கூடாது என்பதற்காக, உள்ளே நுழையும் இடத்திலேயே துணிகளை மாற்றிக்கொள்ள ஏற்பாடு செய்தோம்.

நீண்ட தூரங்களில் இருந்து வருபவர்களுக்குப் பதிலாக, உள்ளேயே தங்கியிருந்து பணியாற்ற முக்கியத்துவம் கொடுத்தோம். நோய்த் தொற்று பரவத் தொடங்கியதும் உறவினர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை. இத்தகைய நடவடிக்கைகளால் முதியோரைப் பாதுகாத்தோம் என்று கூறியிருந்தார். இவரின் பணியை, ஆஸ்டிரேட் அமைப்பு வெகுவாகப் பாராட்டியது. 

அந்த அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர ஆடம் கில்கிறிஸ்ட் பேசியுள்ளார். அதில், உங்களின் தன்னலமற்ற சேவைக்கு வாழ்த்துகள், ஷேரன் வர்கீஸ் இந்தியாவிலிருந்து கல்விக்காக வந்த நீங்கள், வயதான மக்களுக்கு செய்திருக்கும் உதவி மகத்தானது. நீங்கள் செய்திருக்கும் இந்த உதவியால், இந்தியாவுக்கும் உங்கள் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.