மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தொழிலதிபரை சல்லாப வலையில் வீழ்த்தி பணம் பறிக்க முயற்சி: ஹனி ட்ராப் முயற்சி வீணானதால் சிறையில் அடைக்கப்பட்ட கணவன் - மனைவி.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியை சார்ந்த தொழிலதிபர் அதி உல்லா. இவர் தனது மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதி உல்லாவிடம் பணத்தைக் கறக்க முடிவு செய்த கலீம், ஷாபா, ஓபத் ரஹீம், ஆதிக் ஆகியோர் ஷாபாவை அவருடன் பழகவிட்டுள்ளனர்.
மேலும் இருவருக்கும் இடையே தனிமையான உறவையும் வளர்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள ஆர்ஆர் நகர் பகுதியில் தனியாக அறை எடுத்து இருவரும் சில மணிநேரம் பொழுதை கழிக்கலாம் என ஜோடியாக சென்றதை தொடர்ந்து, அங்கு முன்னதாகவே தயாராக இருந்த குழுவினர் ரூ.6 லட்சம் பணம் கேட்டு மிரட்டி இருக்கின்றனர்.
இதனை அடுத்து அங்கிருந்து தப்பி வந்த அதி உல்லா இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் ஷாபா மற்றும் அவரது கணவர் இந்த திட்டத்தை தீட்டியது தெரியவந்துள்ளது. விசாரணைக்கு பின் நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.