மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"ஐயா என்னை பாஸ் பண்ணி விடுங்க".! விடைத்தாள்களில் மாணவர்களின் உணர்ச்சிகர பதில்கள்.!
பீகார் இடைநிலை தேர்வு மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் விடைத்தாள்கள் தற்போது திருத்தப்பட்டு வருகின்றன. ஒருபுறம் இடைநிலை தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வு வாரியம் தயாராகி வரும் நிலையில், மறுபுறம் மாணவர்களின் விடைத்தாள்கள் விவாதப் பொருளாக மாறி வருகிறது.
பீகார் பள்ளி தேர்வு வாரியம் சமீபத்தில் நடந்து முடிந்த இன்டர் மற்றும் மெட்ரிகுலேஷன் தேர்வுகளின் விடைத்தாள்களை ஆய்வு செய்து வருகிறது. தேர்வின் முடிவுகளை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை பீகார் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. எனவே நகல்களின் மதிப்பீடு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
அதில் பல குறும்புக்கார மாணவர்கள், முயற்சி செய்து மதிப்பெண்களை பெற முடியாது என்று எண்ணி, பல உணர்ச்சிகரமான பதில்களை விடைத்தாள்களில் எழுதியுள்ளனர். ஒரு மாணவர் "ஐயா, நான் ஏழை" என்று எழுதியுள்ளார். மேலும் ஒரு மாணவி, "என்னை தயவு செய்து பாஸ் செய்து விடுங்கள். இல்லையெனில், எனது தந்தை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்" என்று எழுதியுள்ளார்.
மேலும் சிலர், "எனக்கு உடல் நலக்குறைவு இருப்பதால் தேர்வை சரியாக எழுத முடியவில்லை", என்று குறிப்பிட்டுள்ளனர். சிலர் சினிமா பாடல்கள், காதல் கவிதைகள், கதைகள் என்று கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் பதில் அளித்துள்ளனர்.
விடைத்தாள்களை ஆய்வு செய்த ஆசிரியர்கள், மாணவர்களின் இந்த செயல்கள் விரும்பத்தக்கதல்ல என்று கூறியுள்ளனர். கேள்விக்கான விடையை எழுதினால் மட்டுமே மதிப்பெண்கள் கிடைக்கும் என்றும், உணர்ச்சிபூர்வமாக மாணவர்கள் ஆசிரியர்களை மிரட்ட நினைப்பது பலன் அளிக்காது என்றும் தெரிவித்துள்ளனர். சிலரால் இந்த விடைகளை பார்க்கும் பொழுது சிரிப்பை அடக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.