நெட்பிளிக்ஸில் 2025ம் ஆண்டு வெளியாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன? வெளியானது அசத்தல் லிஸ்ட்.!
#வீடியோ: கருப்பு நிற இட்லி!! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..
உணவகம் ஒன்றில் கருப்பு நிற இட்டலி தயாரித்து விற்பனை செய்யும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
ஃபேன்டா ஆம்லெட் முதல் ஓரியோ மேகி, சாக்லேட் பிரியாணி வரை வித்தியாசமான மற்றும் வினோதமான உணவு சேர்க்கைகளுக்கு பஞ்சமில்லை. இதுபோன்று பலவிதமான வித்தியாசமான உணவுகள் இணையத்தில் வைரலாவதை பார்த்திருப்போம். இப்போது மேலும் ஒரு பொருளை வினோதமான உணவுகளின் பட்டியலில் சேர்க்கலாம்.
ஆன்லைனில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு மனிதன் இட்லி தயாரிப்பதைக் காணலாம். இதில் ஸ்பெஷல் என்னவென்றால், அந்த நபர் தயாரிக்கும் இட்டலிகள் கருப்பு நிறத்தில் உள்ளது.
இந்த வீடியோவை நாக்பூரைச் சேர்ந்த விவேக் மற்றும் ஆயிஷா என்ற உணவு பதிவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். ஒரு நபர் சாம்பல்-கருப்பு நிற இட்லி மாவை ஒரு ஸ்டீமர் தட்டில் ஏற்றியதில் கிளிப் தொடங்கியது. பின்னர் இட்லிகளை சமைத்து விட்டு பின்னர் ஒரு தட்டில் பரிமாறினார். அடுத்து, சமைத்த இட்லியின் மீது சிறிது நெய் ஊற்றி அதன் மேல் மிளகாய்ப் பொடியைத் தூவினார். அந்த நபர் இட்லிகளின் மேல் அதிக நெய் சேர்த்து தேங்காய் சட்னியுடன் பரிமாறினார்.
இடுகையின் தலைப்பின்படி, நாக்பூரில் உள்ள வாக்கர்ஸ் தெருவில் உள்ள ஆல் அபௌட் இட்லி என்ற இடத்தில் கருப்பு இட்லிகள் கிடைக்கும் என பதிவிடப்பட்டுள்ளது. மேலும் ,“கருப்பு இட்லி. இது ஒரு டிடாக்ஸ் இட்லி. கர்ப்பிணிப் பெண்களுக்கு அல்ல,” என்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வைரலாகும் அந்த வீடியோ பதிவு இதோ.